ஆக்சிஜன் கருவி மூலம்தான் சுவாசிக்கிறேன்: சுவாமி நித்தியானந்தா!
சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் பரவி வரும் நிலையில், அவர் மூச்சுத் திணறலால் அவதிப்படுவதாக தன் முகநூலில் குறிப்பிட்டு புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
சுவாமி நித்தியானந்தா இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் சிக்கி, தனது சீடர்களுடன் தலைமறைவானவர். பின்னர் கைலாசா என்ற நாட்டில் இருப்பதாக அறிவித்தார் நித்தியானந்தா. பின்னர் யூடியூப் மூலம் நேரலை சொற்பொழிவாற்றி வந்தார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நித்தியானந்தா உடல்நிலை நலிந்த தோற்றத்தில் படுத்திருப்பது போன்ற போட்டோக்கள் வெளியாகி பரபரப்பானது.
இந்நிலையில் நித்தியானந்தா தனது முகநூல் பக்கத்தில் தன் உடல்நிலை குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;
கடந்த ஆறு மாதங்களாக தூக்கமில்லாமல் உடல் சோர்வடைந்து விட்டது. எதையும் சாப்பிட முடியவில்ல. கடுமையான மூச்சுத் திணறல் காரணமாக
ஆக்சிஜன் கருவி உதவியுடன்தான் சுவாசிக்க முடிகிறது. நோய் தொற்று தீவிரமாக உள்ளதால் அமர்ந்து பேச முடியவில்லை. அதனால்தான் படுத்தபடியே இருக்கிறேன்.
-இவ்வாறு சுவாமி நித்தியானந்தா தன் முகநூலில் பதிவிட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அவர் விரைவில் உடல்நலம் பெற அவரது சீடர்கள் பிரார்த்தனைகள் மேற்கொண்டு வருகின்றனர்.