அதிமுக பொதுக்குழு கூட்டம்; தடை கோரி வழக்கு!

அதிமுக பொதுக்குழு கூட்டம்; தடை கோரி வழக்கு!
Published on

அதிமுகவில் ஒற்றை தலைமை வேன்டும் என்று கோரி உட்கட்சிப் போராட்டம் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் விதிகளில் திருத்தம் செய்வதற்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தம் செய்யக்கூடாது என்று, கட்சி உறுப்பினர்கள் என்ற முறையில் கே சி பழனிசாமி மகன் சுரேன் என்பவரும், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவரும் உட்கட்சி தேர்தலை செல்லாது என்று அறிவிக்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் இடைக்கால மனுக்களாக தற்போது அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தம் செய்வதற்கு தடை விதிக்க கோரி மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவில் குறிப்பாக கட்சி விதிகளின்படி பொதுச் செயலாளருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதிவுகளுக்கு வழங்கியது செல்லாது என்றும், பொதுக்குழு கூட்டத்தை கூட்ட தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய மனு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று மதியம் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com