12-ம் வகுப்பு துணைத் தேர்வுகள்; இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!

12-ம் வகுப்பு துணைத் தேர்வுகள்; இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!

தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற 10-ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் –டூ வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை அதிகளவிலான மாணவர்கள் எழுதாத நிலையில், அவர்களுக்கான துணைத்தேர்வுகள் இம்மாதம் 25-ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 12ம் வகுப்பு துணைத் தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் இன்று முதல் வழங்கப்படுகிறது

-இதுகுறித்து தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம்  வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது;.

தமிழகத்தில் கடந்த மே மாதம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு ஜூன் 20-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதாதவர்கள், தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத்தேர்வுகள் இம்மாதம் ஜூலை 25ம் தேதி நடைபெற உள்ளது.

இவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகள் இன்று அதிகாரப்பூர்வ இணையதளமான https://dge.tn.gov.in ல் வெளியிடப்படும். ஆகவே  12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

 -இவ்வாறு தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com