கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக, 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்துள்ளதாக நெட்ஃபிளிக்ஸ் அறிவித்துள்ளது.
உலக அளவில் முன்னணியில் உள்ளது, பிரபல ஓ.டி.டி தளமான நெட்ஃபிளிக்ஸ். இதற்கு சமீபகாலத்தில் 2 லட்சம் சந்தாதாரகளை இழந்துள்ள்தாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது:
நெட்பிலிக்ஸூக்கு நடப்பு காலாண்டில் அட்டும் காலாண்டில் மட்டும் அமெரிக்கா மற்றும் கனடாவில் ஆறு லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதற்கு சந்தா கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்கள் உண்டு. மேலும் நெட்ஃபிளிக்ஸ் கணக்கை பலரும் பகிர்வதால், சந்தாதாரர்களை இழக்க நேர்ந்துள்ளது. ஆகவே ஒரு சந்தாதாரர் தங்களது கடவுச் சொல்லை யாரிடமாவது பகிர்ந்து கொள்ள விரும்பினால் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறையை கொண்டு வருவதாக அறிவித்தோம்.
இதன் காரணமாகவும் வாடிக்கையாளர்களை இழக்கும் நிலை ஏற்பட்டது. மேலும், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால், ரஷ்யாவில் நெட்ஃபிளிக்ஸ் சேவை நிறுத்தப்பட்டிருப்பதும், சந்தாதாரர்கள் குறைந்ததற்கு காரணம்.
-இவ்வாறு நெட்பிளிக்ஸ் தேரிவித்துள்ளது.
மேலும் இதே நிலை தொடர்ந்தால், அடுத்த காலாண்டில் இன்னும் 20 லட்சம் சந்தாரர்களை இழக்க நேரிடும் என்று தனது பங்குதாரர்களுக்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளது.