12 எம்.எல்.ஏ-க்கள் மாயம்: மகாராஷ்டிர அரசியல் மர்மம்!

12 எம்.எல்.ஏ-க்கள் மாயம்: மகாராஷ்டிர அரசியல் மர்மம்!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

மகாராஷ்டிராவில் ஆளும்கட்சியான சிவசேனாவைச் சேர்ந்த 1 அமைச்சர் உட்பட 12 எம்எல்ஏக்கள் திடீரென மாயமானதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா சட்ட மேலவையில் காலியாக இருந்த 10 இடங்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளர்கள் 5 பேர், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் சார்பாக தலா 2 பேர், காங்கிரஸ் 1 என்ற  கணக்கில் வெற்றி பெற்றனர். இதில் சிவசேனாவை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களித் திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதனால் ஆளும்கட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 12 எம்.எல்.ஏக்கள் இன்று காலை முதல் திடீரென மாயமாகியுள்ளனர். அவர்களின் செல்போன்கள் அணைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் மாயமான அந்த 12 பேரும் குஜராத்திலுள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. ஆனால், இந்த விவகாரம் குறித்து மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com