பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் காந்தி நினைவிடத்தில் மரியாதை!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் காந்தி நினைவிடத்தில் மரியாதை!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று வந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இன்று டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது;

இங்கிலாந்திலிருந்து 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்த பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சன், முதல் நாள் பயணமாக நேற்று குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அங்கு சபர்மதி காந்தி ஆசிரமம் சென்று பார்வையிட்டார். அங்கு ராட்டையில் நூல் நூற்று மகிழ்ச்சியடைந்தார். பின்னர் அகமதாபாத்திலுள்ள அதானி குழும அலுவலகத்தில், தொழிலதிபர் கவுதம் அதானியை, போரிஸ் ஜான்சன் சந்தித்துப் பேசினார்.

அப்போது, சுற்றுச்சூழல், பசுமை எரிசக்தி, விமான தயாரிப்பு, ராணுவ ஆயுத தயாரிப்பு உள்ளிட்டவற்றில், அதானி குழுமம், பிரிட்டன் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது போன்ற பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதையடுத்து இன்று காலையில் முதல் நிகழ்ச்சியாக டெல்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று பிரிட்டன் பிரதமர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் காந்தியை பாராட்டி எழுதினார்.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com