ஆகஸ்ட் 15: வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்!

ஆகஸ்ட் 15: வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள்!

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவரும் தம் வீடுகளில் ஆகஸ்ட் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:

நாட்டின் 75-வது சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப் பட உள்ள நிலையில், மத்திய அரசு 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு எற்பாடு செய்து நடைபெற்று வருகிறது.

இதையடுத்து நாட்டின் 75 பகுதிகளில் 75 வாரங்களுக்கு இந்த கொண்டாட்டங்கள் நடைபெறும். இதன் தொடக்க நிகழ்ச்சியாக குஜராத் மாநிலம் சபர்மதி பகுதியில் இருந்து 21 நாட்கள் தண்டி பகுதிக்கு செல்லும் பாத யாத்திரையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்துவது, நாட்டில்  75 கடற்கரைகளை சுத்தம் செய்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.அந்த நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக 'ஹர் ஹர் ட்ரையாங்கா' என்ற நிகழ்ச்சி உருவாக்கப் பட்டுள்ளது. அதாவது 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவர் வீடுகளிலும் அன்று தேசியக் கொடி ஏற்றுவதே இத்திட்டமாகும்.

-இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்ததாவது;

நாட்டில் '​​ஹர் கர் திரங்கா' இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில், ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி தேதி வரைநாட்டில் அனைவர் வீடுகளிலும் கம்பீரமாக  மூவர்ணக் கொடியை ஏற்றுங்கள். நாட்டு தேசியக் கொடியுடனான நமது உணர்வுகளை இது அதிகப்படுத்தும்.

-இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com