இலங்கையில் பொருளாதாரச் சரிவு: இலங்கை அகதிகள் தமிழகம் வருகை!

இலங்கையில் பொருளாதாரச் சரிவு: இலங்கை அகதிகள் தமிழகம் வருகை!
Published on

இலங்கையின் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், விலைவாசி ஏற்றத்தை தாக்கு பிடிக்க முடியாமல் பெரும்பாலான இலங்கையர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக படையெடுத்து வரும் சூழல் உருவாகியுள்ளது.

இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளதால், விலைவாசி தீவிரமாக உயர்ந்து மக்கள் அத்தியாவசிய பொருள்களை வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்ததை அடுத்து பொதுமக்கள்  சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையிலிருந்து வெளியேறி அகதிகளாக பலர் தமிழகத்துக்கு படையெடுத்து வரும் சூழல் உருவாகி வருகின்றது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே 13 மணல் திட்டுகள் உள்ளது, இதில் இந்தியாவிற்கு சொந்தமான 6 திட்டுகளூம் இலங்கைக்கு சொந்தமான 7 திட்டுகளும் உள்ளன. இந்த நிலையில் நேற்று தனுஷ்கோடியை  அடுத்த மூன்றாம் மணல் தீடை பகுதியில்  1 ஆண், 2 பெண்கள், மற்றும் ஒரு கை குழந்தை உட்பட 3 குழந்தைககள் என ஆறு நபர்கள் நிற்பதாக கியூ பிரிவு  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் தெரிய வந்ததாவது:

இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து இந்த 6 பேரும் அகதிகளாக தமிழகத்துக்கு வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இதேபோன்று இலங்கையில் இருந்து  அகதிகளாக ஏராளமானோர் தமிழகத்துக்கு வர தயாராக இருப்பதாகவும் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இந்திய கடலோர காவல் படை,  கியூ பிரிவு, மரைன் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com