தமிழகத்தில் தனியார் தொழில் நிறூவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை விரைவுபடுத்த அரசு புறம்போக்கு நிலத்தை பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்ததாவது;
தமிழகத்தில் தனியார் தொழில் நிறூவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்கள் தொழிவை விரிவுபடுத்த அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு அரசு நிலங்களைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு பதிலாக, அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான அதே அளவிலான நிலத்தை அரசுக்கு பரிமாற்றம் செய்து கொடுக்க வேண்டும். இதற்கான பட்டாவானது, நிலத்தின் விலை மற்றும் அரசு வழிகாட்டுதல் மதிப்பின்படி நிர்ணயம் செய்யப்படும். விண்ணப்பதாரர் பரிமாற்றம் செய்யப்படும் நிலத்தின் தெளிவான உரிமைகளுடன் மொத்த நிலத்தின் 30% நிலத்தை மட்டும் பரிமாற்றம் செய்ய முடியும்.
-இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவை தனியார் நிறுவனங்கள் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.