டெல்லியில் பலத்த காற்றுடன் கனமழை; விமானசேவை பாதிப்பு!

டெல்லியில் பலத்த காற்றுடன் கனமழை; விமானசேவை பாதிப்பு!

Published on

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால, அங்கு கடுங்குளிர் மற்றூம் மின்வெட்டு ஏற்ப்பட்டுள்ளது. ஆங்காங்கே மரங்கள் சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது

-இதுகுறித்து டெல்லி அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவித்ததாவது:

டெல்லிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் கொடுத்திருந்த நிலையில், டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை சூறைக்காற்றுடன் கனமழைஅ பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மேலும் இங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக சர்வதேச விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

-இவ்வாறு  தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் டெல்லி வானிலை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:

டெல்லியில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ள நிலையில், தொடர்ந்து 60 கி.மீட்டர் முதல் 80 கி.மீட்டர் வரை தரைக்காற்று வீச வாய்ப்புள்ளது. டெல்லிக்கு அருகாமையிலுள்ள  ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

-இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com