ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி; குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பு!

ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி; குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பு!
Published on

குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று ஜப்பான் புற்ப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அழைப்பின் பேரில், தனி விமானம் மூலம் டோக்கியோ சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அமைச்சர்களும் அங்குள்ள இந்திய மக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஜப்பானில் நடைபெறவிருக்கும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடம்பெற்ற குவாட் அமைப்பின் 2-வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்க்காக மோடியின் இந்த பயணம் அமைந்துள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது:

இந்தியா, ஜப்பான் மற்றும் உலகளாவிய கூட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பேச்சுவார்த்தை நடைபெறவிருப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். சர்வதேச பிரச்னைகள் தொடர்பாக விவாதிக்க இந்த பயணம் நல்ல வாய்ப்பாக அமையும். குவாட் மாநாட்டில் பங்கேற்கும் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உடனான சந்திப்பை எதிர்நோக்கி உள்ளேன். அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது பற்றியும் ஆலோசனை நடத்தவுள்ளேன்.

-இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com