டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது, 100 கோடி ரூபாய் இழப்பீடு கோரி அசாம் முதல்வரின் மனைவி மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
அசாமில் கொரோனா கவச உடைகள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார் இந்த மோசடியில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயன் சர்மாவுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு அசாம் முதல்வர் மறுப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் ரினிகி புயன் சர்மா, ரூ.100 கோடி இழப்பீடு கோரி மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.அதில் அவர் தெரிவித்ததாவது:
டெல்லி முதல்வரின் குற்றச்சாட்டு அபாண்டமானது. வேண்டுமென்றே என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அசாமில் கொரோனா முழு கவச உடை வாங்குவதற்கான ஒப்பந்தம் எனக்கு அளிக்கப்படவில்லை. நான் 1,485 கவச உடைகளை நன்கொடையாகத் தான் அளித்தேன்.அதனால் ,டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ரூ. 100 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும்.
-இவ்வாறு அசாம் முதல்வரின் மனைவி தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.