IPL கிரிக்கெட் போட்டி; கடைசி இடம் பிடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி! 

IPL கிரிக்கெட் போட்டி; கடைசி இடம் பிடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி! 
Published on

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் முதன்முறையானிந்த 15-வது சீசன் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்தை பிடித்துள்ளது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாவது:

ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் போட்டி அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதன் பிளே ஆஃப் போட்டிகள் நாளை முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஐபிஎல்-லின் முன்னாள் சாம்பியன் அணிகள் இம்முறை புள்ளிப் பட்டியலில் கடைசி இடங்களைப் பிடித்துள்ளது.

அந்த வகையில் 5 முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் முதன்முறையாக கடைசி இடம் பிடித்துள்ளது. ஐபிஎல் தொடரின் ஆரம்பத்திலிருந்து விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே ஒரு முறைகூட இறுதி இடத்தை பிடிக்காமல் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com