கிருஷ்ண ஜென்ம பூமியிலுள்ள மசூதியில் அனுமதிக்க வேண்டும்; இந்து மகா சபா மனு தாக்கல்!

கிருஷ்ண ஜென்ம பூமியிலுள்ள மசூதியில் அனுமதிக்க வேண்டும்; இந்து மகா சபா மனு தாக்கல்!
Published on

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமியில் சுமார் இரண்டரை ஏக்கர் நிலப்பரப்பில் சாஹி இத்கா என்ற மசூதி உள்ளது. இந்த மசூதிக்குள் இந்துக்கள் சென்று வழிபாடு நடத்தவும் அபிஷேகம் செய்யவும் அனுமதிக்குமாறு இந்து மகா சபா சார்பில் தினேஷ் சர்மா என்பவர் மதுரா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

அந்த மனுவில் குறிப்பிட்டதாவது:

மதுராவில் சாஹி இத்கா மசூதி அமைந்திருக்கும் பகுதியானது பகவான் ஶ்ரீகிருஷ்ணர் பிறந்த இடமாகும். எனவே அந்த மசூதியில் இந்துக்கள் சென்று அபிஷேகம் செய்து வழிபட நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்.

-இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவானது வருகிற  ஜூலை 1-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கிருஷ்ண ஜென்ம பூமியில் சாஹி இத்கா மசூதி ட்டப்பட்டுள்ள நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்கக் கோரி ஸ்ரீ கிருஷ்ண விரஜ்மான் என்பவர் மதுரா சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை  மறு நாள் (மே 26) விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com