திரௌபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல்!

திரௌபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல்!
Published on

நாட்டின் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தலில் பாஜக-வுடனான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு இன்று அப்பதவிக்கான தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மத்திய ஆளுங்கட்சியான பிஜேபி-யுடனான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் திரௌபதி முர்மு இன்று தனது வேட்புமனுவை கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று தாக்கல் செய்தார். 

இதற்கு முன்னதாக நேற்று ஒடிசாவிலிருந்து திரௌபதி முர்மு டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தன் டிவிட்டரில் தெரிவித்ததாவது:

குடியரசுத்தலைவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட  திரௌபதி முர்முவை நாட்டின் அனைத்து பிரிவினரும் வரவேற்றுள்ளனர். அடிமட்ட பிரச்சினைகளை பற்றிய அவரது புரிதல் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான பார்வை சிறப்புக்குரியது.

-இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.  இந்நிலையில் முர்முவை எதிர்த்துப் போட்டியிடும் யஷ்வந்த் சின்கா தன்வேட்பு மனுவை இம்மாதம் 27-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com