அரசு ஆன்லைன் டாக்ஸி சேவை; கேரளாவில் துவக்கம்! 

அரசு ஆன்லைன் டாக்ஸி சேவை; கேரளாவில் துவக்கம்! 

நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் அரசே ஏற்று நடத்தும் ஆன்லைன் டாக்ஸி சேவையை 'கேரள சவாரி' என்ற பெயரில் மாநில அரசு தொடங்கி உள்ளது. 

 –இதுகுறித்து கேரள தொழில்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்ததாவது: 

கேரளாவில் இப்போது திருவனந்தபுரத்தில் மட்டும் 'கேரள சவாரி' திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் 321 ஆட்டோக்கள் மற்றும் 228 கார்கள் இணைந்துள்ளன.

அதிலும் தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் 22 பெண் ஓட்டுநர்களும் உள்ளனர். குறைவான வாடகை, பாதுகாப்பான பயணம் இவை இரண்டும் இத்திட்டத்தின் நோக்கம். காவல் துறையிடம் இருந்து ஒழுக்கச்சான்று பெற்று வரும் ஓட்டுநர்கள் மட்டுமே இத்திட்டத்தில் சேர முடியும்.

கேரள சவாரியில் பதிவு செய்ய வசதியாக தனி இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. கேரளாவில் தனியார் வாகனங்களில் 20 முதல் 30 சதவீதம் சேவைக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் சூழலில், கேரள சவாரியில் 8 சதவீதம் மட்டுமே சேவைக்கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. 

கேரள சவாரி திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு மானிய விலையில் ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தங்கள் வாகனங்களை இணைத்திருக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் எரிபொருள் கட்டண சலுகை, டயர் விலையில் மானியம் போன்ற  சலுகைகளை அரசு வழங்கும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com