இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி அவரது வீட்டை ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் முற்றுகையிட்டனர்.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ராஜபக்ச அரசு பதவி விலகக்கோரி போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. தலைநகர் கொழும்புவில் அதிபர் அலுவலகத்தை நோக்கிச் சென்ற பல்கலைக்கழக மாணவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால் தடைகளை மீறி பிரதமர் வீட்டு முன்பு கூடிய மாணவர்கள், அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து பேரணியாக சென்ற மாணவர்கள், அதிபர் அலுவலகம் எதிரே உள்ள காலிமுகத்திடலில் கூடி, இரவில் செல்போன் டார்ச் விளக்குகளை ஒளிரச் செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலங்கை அரசுக்கு எதிரான போராட்டம் மக்கள் கிளர்ச்சியாக வெடித்து தீவிரம் அடைந்து வருவதால், இலங்கையில் பதற்றமான சூழலே நிலவுகிறது.