தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி பட்டியலின மக்களை இழிவாக பேசியதாக அவர்மீது ஆவடி காவல் ஆணையாளரிடம் புரட்சி பாரதம் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.
–இதுகுறித்து புரட்சி பாரதம் கட்சியினர் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திண்டுக்கல் ஐ லியோனி பேசிம்போது, பட்டியலின மக்களைத் தரக்குறைவாகப் பேசினார். அதில் ''செருப்பை தூக்கி தலையில் வைத்துக் கெண்டு போன சமூகத்தை இப்போது வணக்கத்துக்குரிய மேயர் என்று சொல்ல வைத்தது யார்?'' என பட்டியலின சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில்; பேசினார்.
இது தமிழகத்தில் சாதிய வன்முறையினை தூண்டும் வகையிலும் பட்டியலின சமூகத்தை இழிவுபடுத்தும் வகையிலும் உள்ளது. அதளால் திண்டுக்கல் லியோனி சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளோம். மேலும் அவரை தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
-இவ்வாறு தெரிவித்தனர்.