12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம்: நாட்டில் அதிகரிக்கும் நிலக்கரி தட்டுப்பாடு!

12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம்: நாட்டில் அதிகரிக்கும் நிலக்கரி தட்டுப்பாடு!
Published on

இந்தியாவில் ஏற்பட்டுள்ள நிலக்கரி தட்டுப்பாட்டால் தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்தியாவில் மின்சாரத்தை அதிகம் பயன்படுத்தும் மூன்று மாநிலங்கள் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத். நாட்டின் ஒட்டுமொத்த மின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை இந்த மூன்று மாநிலங்களே எடுத்துக் கொள்கின்றன. நம் நாட்டின் மொத்த மின் உற்பத்தியான சுமார் 400 ஜிகா வாட்களில் 280 ஜிகா வாட் மின்சாரத்தை அனல் மின் நிலையங்கள் தயாரித்துக் கொடுக்கின்றன.

நாடு முழுவதும் உள்ள 173 அனல் மின் நிலையங்களில் பாதிக்கும் மேற்பட்டவை இறக்குமதி நிலக்கரியின் மூலமாக மின்சாரம் தயாரித்து அளிக்கிறது.

இந்நிலையில் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக சர்வதேச அளவில்  நிலக்கரி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மற்றொரு புறம் மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களில் கடும் மழை காரண்மாக நிலக்கரி தோண்டும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கோடை காரணமாக பல மாநிலங்களில் மின்சார தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நாட்டில்  உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டு, இறக்குமதியும் குறைந்து போனதால் வரலாறு காணாத வகையில் நிலக்கரி கையிருப்பு மளமளவென சரிந்துள்ளது.

இதனாலேயே, மத்திய தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு தர வேண்டிய மின்சாரத்தை கொடுக்க முடியாமல் தவிக்கிறது மத்திய அரசு. இதே நிலை தொடர்ந்தால் நாட்டில் 12 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com