ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்;  44 பில்லியன் டாலர் விலை கொடுத்து ஒப்பந்தம்!

ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்;  44 பில்லியன் டாலர் விலை கொடுத்து ஒப்பந்தம்!
Published on

சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க் வாங்குவது உறுதியாகியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை  44 பில்லியன் அமெரிக்க டாலர் விலைகொடுத்து வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

எலான் மஸ்க் ஏற்கனவே ட்விட்டரின்  9.2 சதவீத பங்குகளை வைத்திருந்த நிலையில், தற்போது 44 பில்லியன் டாலருக்கு மொத்த நிறுவனத்தையும் விற்க ட்விட்டர் நிர்வாகக்குழு ஒப்புதல் தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், எலோன் மஸ்க் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது;

பேச்சு சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை. அந்த வகையில் ட்விட்டர் ஒரு டிஜிட்டல் டவுன் சதுக்கம், இங்கு மனிதநேய அடிப்படையில் முக்கியமான எதிர்கால பிரச்சினைகள் விவாதிக்கப்படும்.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதற்கு உலகம் முழுவதிலுமிருந்து அவருக்கு ட்விட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com