இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானி: அபிலாஷா பராக்!

இந்திய விமானப் படையின் முதல் பெண் போர் விமானி: அபிலாஷா பராக்!
Updated on

இந்திய விமானப் படையில் இணைந்த  முதல் பெண் போர் விமானி என்ற பெருமை பெற்றுள்ளார் அபிலாஷா பராக்.

இந்திய ராணுவத்தின்  விமானப் படையில் இதுவரை போர் விமானிகளாக பெண்கள் யாரும் பணிபுரியாத நிலையில், முதன்முறையாக பெண் போர் விமானியாக அபிலாஷா பராக் நேற்று பொறுப்பேற்றார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள போர் விமானிகள் பயிற்சி பள்ளியில் பயிற்சி முடித்த அபிலாஷா, நேற்று பொறுப்பேற்றார்.  அபிலாஷாவுக்கு  பயிற்சி நிறைவு பதக்கத்தை ராணுவ வான்பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜெனரல் .கே.சூரி அணிவித்தார்

அபிலாஷா பராக், அரியானா மாநிலம், பஞ்ச்குலாவை சேர்ந்தவர். இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராணுவ வான்பாதுகாப்பு படையில் சேர்ந்தார். இவரது தந்தை ஓம் சிங், இந்திய ராணுவத்தில் காஷ்மீரில் கர்னலாக பதவி வகித்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com