சர்வதேச மாஸ்டர் செஸ் போட்டி: 2-ம் இடம் பிடித்தார் பிரக்ஞானந்தா!

சர்வதேச மாஸ்டர் செஸ் போட்டி: 2-ம் இடம் பிடித்தார் பிரக்ஞானந்தா!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

சர்வதேச அளவில் முக்கியமான 16 செஸ் வீரர்கள் பங்கேற்ற செசபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டியில் சென்னையைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.

இந்த சர்வதேச செஸ் போட்டி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில், நேற்று ( மே 26) நடந்த இறுதிபோட்டியில் உலகின் நம்பர் 2 செஸ்  வீரரான லிங் டிரன் என்பவரை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். இப்போட்டியின் ஆரம்பம் முதலே லிங் டிரன் ஆதிக்கம் செலுத்திய நிலையில் இறுதியில் பிரக்ஞானந்தாவை வென்றார். இதையடுத்து இப்போடியில் பிரக்ஞானந்தாவுக்கு 2-ம் இடம் கிடைத்தது. எனினும் இப்போட்டித் தொடரில் பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.

இதையடுத்து பிரக்ஞானந்தாவிற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் வேலைவாய்ப்பு அளித்து அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.அதன்படி, பிரக்ஞானந்தா தனது 18-வது வயதில் தம் நிறுவனத்தில் பணியில் சேர்வார் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com