நாடாளுமன்ற உரிமை மீறல்; சிபிஐ மீது நடவடிக்கை கோரி கார்த்தி சிதம்பரம் முறையீடு!

நாடாளுமன்ற உரிமை மீறல்; சிபிஐ மீது நடவடிக்கை கோரி கார்த்தி சிதம்பரம் முறையீடு!
Published on

சிபிஐ யின் நடவடிக்கை நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையை மீறும் வகையில் உள்ளதாகக் கூறி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் கார்த்திக் சிதம்பரம் குறிப்பிட்டதாவது;

சிபிஐ-யின் செயல்பாடுகள் என்னுடைய நாடாளுமன்ற செயல்பாடுகளில் நேரடியாக தலையிடுவதாக உள்ளது. எனது வீட்டில் வைத்திருந்த அலுவலகம் சார்ந்த முக்கிய ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதை நாடாளுமன்ற உரிமை மீறலாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய பாஜக அரசுக்கு எதிரான எனது குரலை ஒடுக்க வேண்டும் என்பதற்காக சிபிஐ என்மீது பொய் வழக்கு போட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் எனது செயல்பாடுகளை தடுக்க முயற்சிப்பது, ஜனநாயகத்துக்கு முரணானதாகும். ஆகவே சிபிஐக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேன்டும்.

-இவ்வாறு தனது கடித்தத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2011-ம் ஆண்டு சீன நாட்டைச் சேர்ந்த 263 பேருக்கு முறைகேடாக விசா பெற்றுத் தருவதற்காக ரூ.50 லட்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் சென்னையில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com