200 கி.மீ வேகத்தில் பந்து வீச்சு?!  அதிர்ச்சியான அயர்லாந்து அணி!

200 கி.மீ வேகத்தில் பந்து வீச்சு?!  அதிர்ச்சியான அயர்லாந்து அணி!
Published on

கிரிக்கெட் உலகில் அதிரவைக்கும் சம்பவம் இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் அரங்கேறியது.

ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20 கிரிக்கெட் போட்டிகள் விளையாட அயர்லாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நேற்று அந்நாட்டு அணிக்கு எதிராக முதல் 20 ஓவர் போட்டியில் பங்கேற்றது. மழை காரணமாக போட்டி தாமதமாக தொடங்கிய இப்போட்டி, பின்னர் 12  ஓவர்களாக குறைப்பட்ட நிலையில் முதலில் களமிறங்கியது  அயர்லாந்து அணி. இந்த அணி 12 ஓவர் முடிவில் 108 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 9.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது

இப்போட்டியில் முதலில் பந்துவீசிய இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் வீசிய இரண்டு பந்துகள் 200 கி.மீ வேகத்துக்கு மேல் வீசப்பட்டதாக ஸ்பீடு கன் காட்டியது, ஒரு பந்து 201 கி.மீ என காட்டிய ஸ்பீடு கன் மற்றொரு பந்தின் வேகத்தை 208 கி.மீ வேகத்தில் வீசியதாக காட்டியது.

இதுவரை பாகிஸ்தானின் ஷோயிப் அக்தர் 161 கி.மீ வேகத்தில் பந்துவீசியது மட்டுமே அதிகபட்ச ரெக்கார்டாக இருக்கும் நிலையில், புவ்னேஷ் குமார் ஒரே போட்டியில் இரு முறை 200 கி,மீ வேகத்தில் பந்து வீசியதாகக் காட்டப்பட்டது கண்டு மொத்த கிரிக்கெட் உலகமும் ஆச்சரியத்தில் திகைத்தது. 

பின்னர் தொழில்நுட்ப கோளாறால் இந்த குளறுபடி நடந்தது தெரிய வந்தது. இக்கோளாறு காரணமாக புவனேஷின் பந்துவீச்சு அதிவேகமாக காட்டப்பட்டது கண்டறியப்பட்டது. இந்த ஸ்கிரீன் ஷாட்டை இணையத்தில் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள் ஜாலியாக கலாய்த்து வருகின்றனர்

அதேநேரத்தில் பவர் பிளேவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார். இதுவரை பவர் பிளேவில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அயர்லாந்து அணியுடனான இந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com