ஜூலை 1 முதல் சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு!

ஜூலை 1 முதல் சுங்கச் சாவடி கட்டணம் உயர்வு!
Published on

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள நாவலூர் சுங்கச் சாவடியில் சுங்க கட்டணங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதையடுத்து கட்டண உயர்வு குறித்து வாகன ஓட்டிகளிடம் சுங்கச் சாவடி ஊழியர்கள் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.

-இதுகுறித்து அந்த டோல்கேட் சார்பில் வெளியான தகவலில் தெரிவிக்கப் பட்டதாவது:

சென்னை ஓ.எம்.ஆர் சாலையிலுள்ள நாவலூர் சுங்கசாவடியில் 2036-ம் ஆண்டு வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கவும், ஒவ்வொரு  ஆண்டும் ஜூலையில் சுங்க கட்டணம் உயர்த்தவும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூலை 1-ம் தேதி முதல், இந்த சுங்கச் சாவடி வழியாக வரும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அந்த வகையில் கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கான கட்டணம் 30 ரூபாயில் இருந்து 33 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.

சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் 49 ரூபாயில் இருந்து 54 ரூபாயாகவும் பஸ் மற்றும் கனரக வாகனங்களுக்கான கட்டணம் 78 ரூபாயில் இருந்து 86 ரூபாயாகவும் உயர்த்தப்பட உள்ளது.உள்ளூர் கார்கள் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கான மாத கட்டணம் 350 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com