நர்சிங் படிப்பு முடித்து இந்திய ராணுவத்தில் பணியும் சேர விரும்பும் பெண்களுக்கு அத்தகைய வாய்ப்பை இந்திய ராணுவம் அறிமுகப் படுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்ததாவது:
இந்திய ராணுவத்தில் மிலிட்டரி நர்சிங் சர்வீஸஸ் (MNS) எனப்படும் பணிகளில் சேருவதற்கு நர்சிங்துறையில் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தற்போது பெண்களுக்கான அந்த 4 வருடப் படிப்பை இந்திய ராணுவமே அறிமுகப்படுத்தி, அதில் சேருமாறு பெண்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. இப்படிப்பில் சேர பெண்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான 6 மருத்துவக் கல்லூரிகளில் இந்த படிப்பை பயிலலாம். இப்படிப்பை வெற்றிகரமாக முடித்தவுடன் இந்திய ராணுவத்திலேயே Short Commission பணியிலோ அல்லது நிரந்தரப்பணியிலோ இணைந்து பணியாற்றலாம். மொத்தம் 4 ஆண்டுகள் கொண்ட இந்த நர்சிங் படிப்பில் சேர 2022 ஆண்டின் நீட் தேர்வில் தகுதி பெற்றிருக்கவேண்டும்.
இந்த படிப்பு பற்றிய மேலும் தகவல்களுக்கு www.indianarmy.nic.in மற்றும் www.joinindianarmy.nic.in என்ற இணைய முகவரிக்கு சென்று பெறலாம். இந்த படிப்பில் சேர ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான தேதிகள் 11.05.2022 முதல் 31.05.2022 வரை ஆகும்.
-இவ்வாறு இந்திய ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.
– ராஜ்மோகன்.