தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை சென்னைக்கு திரும்பினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
துபாயில் நடந்து வரும் சர்வதேச தொழிற்கண்காட்சியில், தமிழகத்தில் தொழில் தொடங்க 6 துபாய் நிறுவனங்களுடன் 6100 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கு கிட்டதட்ட 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அந்த 6 நிறுவனங்களோடு நேரடியாக ஒப்பந்தம் போட்டு இருக்கிறோம். அதனால் அவர்கள் எந்த நிபந்தனையும் இன்றி தொழில்களை எளிதாக நடத்த முடியுமென்றும், அதற்கான சூழ்நிலையை தமிழகத்தில் உருவாக்கித் தருகிறோம் என்று எடுத்துச் சொன்னோம்.
அந்த 6 நிறூவனங்கலும் அந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள். மேலும் இந்த தொழில்களைத் தொடங்க குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்து ஒப்பந்தம் போட்டுள்ளோம். ஆனால் குறிப்பிட்ட முன்னதாகவே அந்நிறுவனங்களைத் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகளை செய்து வருகிறோம்.
-இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.