ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா: ரங்கா ரங்கா கோஷத்துடன் தேர் ஊர்வலம்! 

ஸ்ரீரங்கம் சித்திரை திருவிழா: ரங்கா ரங்கா கோஷத்துடன் தேர் ஊர்வலம்! 
Published on

திருச்சி ஸ்ரீரங்கம் ஶ்ரீரங்கநாதர் கோயிலில் இன்று சித்திரை தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. பக்தர்கள் ரங்கா ரங்கா என கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஒவ்வொரு வருடமும் சித்திரை தேர்த் திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று வையாளி உற்சவம் நடந்தேறியது. 

அதைத்தொடர்ந்து இன்று  காலை சித்திரை தேர்த் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 4.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு, சித்திரைத் தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். இதன்பிறகு, நம்பெருமாள் காலை 6.15 மணிக்கு மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர் நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பிறகு காலை 6.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள், ரங்கா, ரங்கா என்று கோஷம் இட்டவாறு தேரை வடம் பிடித்து தேரை இழுத்தனர். கீழ சித்திரை வீதியிலிருந்து புறப்பட்டு, தெற்கு சித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி ஆகியவற்றில் வலம் வந்து, மீண்டும் காலை 10.30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com