அமைச்சர் துரைமுருகனுக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் துரைமுருகனுக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி

Published on

தமிழக அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் துரைமுருகன் துபாய் செல்ல நேற்று சென்னை விமான நிலையம் வந்து, விமானத்தில் ஏறி அமர்ந்தார்.

அப்போது விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவருக்கு திடீரென லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அமைச்சர் துரைமுருகன் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப் படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com