இந்தியாவிள் டிரோன்கள் மூலம் பார்சல்கள் அனுப்பக்கூடிய சோதனை முயற்சியில் இந்திய அஞ்சல்துறை வெற்றிகன்டுள்ளது. மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
-இதுகுறித்து மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்ததாவது;
இந்தியாவின் அனைத்து நகரங்கலிலும் இந்திய தபால் துறி அஞ்சல்கள் மற்றும் பார்சல்கள் பட்டுவாடா செய்கிற்து. அந்த வகையில் குஜராத் மாநிலத்தின் புஜ் தாலுகாவிலுள்ள ஹபே கிராமத்திலிருந்து, கட்ச் மாவட்டத்தில் உள்ள நேர் கிராமத்திற்கு ட்ரோன் வாயிலாக பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையில் சுமார் 46 கிலோமீட்டர் தூரத்தை 25 நிமிடங்களில் கடந்த டிரோன், பார்சலை வெற்றிகரமாக டெலிவரி செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றியடைந்த நிலையில், டிரோன்கள் மூலமாளிந்திய தபால் துரி நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பட்டுவாடா செய்யும் முயற்சியை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
–இவ்வாறு மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது