சித்து மூஸ்வாலாவை கொன்றவர்கள் தப்பிக்க முடியாது: பஞ்சாப் முதல்வர்!

சித்து மூஸ்வாலாவை கொன்றவர்கள் தப்பிக்க முடியாது: பஞ்சாப் முதல்வர்!
Published on

பிரபல பஞ்சாப் பாப் பாடகர் சித்து மூஸ் வாலா மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது என்று அம்மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

பஞ்சாபைச் சேர்ந்த பிரபல பாப் பாடகரான சித்து மூஸ் வாலா (28). கடந்த ஆண்டு டிசம்பரில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவருக்கு வி.ஐ.பி போலீஸ் பாதுகாப்பு அளிக்கப் பட்டது. இதையடுத்து சமீபத்தில் நடந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் மான்சா தொகுதியில் சித்து போட்டியிட்டு தோல்வியுற்றார்.

பஞ்சாபில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பொறுப்பேற்ற கையோடு சிக்கன நடவடிக்கையாக, அம்மாநிலத்தில் 420 விஐபிக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றது. இதனால், சித்து மூஸ் வாலாவுக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பும் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், மான்சா மாவட்டத்தில் நேற்று காரில் சென்று கொண்டிருந்தபோது சித்து மூஸ் வாலாவை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் சித்துவும் அவருடன் பயணித்த இருவரும் உயிரிழந்தனர்.  சித்துவுக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட  24 மணி நேரத்துக்குள் இந்தச் சம்பவம் நடந்த்தால் கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

இந்நிலையில் சித்து மூஸ் வாலா படுகொலைக்கு இரங்கல் தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், தனது ட்விட்டர் பதிவிட்டதாவது;

சித்து மூஸ் வாலாவின் படுகொலையால் நான் அதிர்ச்சியும், ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளேன். இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. அவரது குடும்பத்தினர் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்திற்குக் காங்கிரஸ் கட்சித் ட்ஜலைவர் ராகுல் காந்தி  கடும் கண்டனம் தெரிவித்துள்ள்ளார். மேலும் சித்து மூஸ் வாலாவுக்கு தரப்பட்ட போலீஸ் பாதுகாப்பு நீக்கப்பட்டதற்கான காரணத்தை தெளிவு படுத்தும்படி காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com