ஜூலை-17 நீட் தேர்வு; அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஹைடெக் பயிற்சி என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

ஜூலை-17 நீட் தேர்வு; அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஹைடெக் பயிற்சி என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
Published on

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பு:

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளை மறுநாள் (ஏப்ரல் 2) முதல் மே 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வானது இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும். கடந்த ஆண்டு 16.4 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு 20 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

-இவ்வாறு தேசியத் தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு மாணவர்களுக்கு ஹைடெக் லேப் மூலம் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இதுகுறித்து அவர்  கூறியதாவது;

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அரசின் முயற்சிகள் தொடரும். அதில் வெற்றி பெறும் வரை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஹைடெக் லேப் மூலம் நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படும்.

தமிழகத்தில் செயல்படும் 37,358 அரசுப் பள்ளிகளில் சுமார் 48 லட்சம் மாணவ, மாணவிகள் பயில்கின்றனர். ஏறத்தாழ 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மத்திய அரசின் நிதியுதவி மூலம் அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மாணவர்கள் இணைய வசதியுடன் கல்வி கற்கும் வகையில் ஹை-டெக் லேப்கள் அமைக்கப் பட்டுள்ளன. இதன்மூலம் மாணவர்களுக்கு கணினி பயிற்சி வழங்குவதுடன், இணையவழி தேர்வுகளும் நடத்தப்படுகின்றன.இந்த நிலையில் நீட் தேர்வுக்கு தயாராகும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஹைடெக் லேப் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

-இவ்வாறு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com