ரஷ்ய அதிபர் புதினுக்குப் புற்றுநோய்; அதிகபட்சம்  3 ஆண்டுகள் வாழ்வார் என தகவல்!

ரஷ்ய அதிபர் புதினுக்குப் புற்றுநோய்; அதிகபட்சம்  3 ஆண்டுகள் வாழ்வார் என தகவல்!

ரஷ்ய அதிபர் புதின் புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருப்பதாகவும், அந்நோய் மிகவும் தீவிரமானதால், அவர் இன்னும் அதிகபடசம் 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார் என்றும் ரஷ்ய மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

-இதுகுறித்து பிரிட்டனில் தலைமறைவாக உள்ள முன்னாள் ரஷ்ய உளவுத்துறை அதிகாரியான கார் பீச்கோ என்பவர் ரஷ்ய அதிபர் புதினின் உடல்நிலை குறித்து அனுப்பிய தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவர் குறிப்பிட்டதாவது;

ரஷ்ய அதிபர் புதின் புற்றுநோய் தீவிரத்தால் கண் பார்வையை இழந்து வருவதாகவும், அவர் அதிகபட்சமாக இன்னும் 3 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்வார் என ரஷ்ய மருத்துவர்கள் கெடு விதித்துள்ளனர். மேலும் தற்சமயம் புதின் கடுமையான தலைவலியால் அவதிப்படுகிறார்.

-இவ்வாறு அந்த ரஷ்ய  உளவுத்துறை அதிகாரி அனுப்பிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com