போதைமருந்து வழக்கு: சிறையில் மகனைச் சந்தித்தார் ஷாருக் கான்!

போதைமருந்து வழக்கு: சிறையில் மகனைச் சந்தித்தார் ஷாருக் கான்!
Updated on

மும்பை போதை மருந்து வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டு, அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மும்பை ஆர்தர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மகனைக் காண ஷா ருக்கான் இன்று முதல்முறையாகச் சிறைக்குச் சென்று சந்தித்தார்.

மும்பை ஆர்தர் சிறைக்கு இன்று காலை 9 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வந்த நடிகர் ஷாருக்கான், 9.35 மணிக்கு சிறையிலிருந்து வெளியேறினார். ஏறக்குறைய 10 நிமிடங்கள் தனது மகன் ஆர்யன் கானுடன் ஷாருக் கான் பேசியதாகச் சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஷாருக்கான் வரப் போவதாக அறிந்ததும், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டனர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக, சிறைக் கைதிகளை சந்திக்க அவர்கள் குடும்பத்தினருக்கு அனுமதி இல்லாத நிலையில், இன்று முதல் அனுமதிக்கப் பட்டுள்லது. அதையடுத்து ஷாருக்கான் முதன்முறையாக தன் மகனை இன்று சிறையில் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com