#BREAKING: விமானப்படை பயிற்சி விமானம்: விபத்தில் விழுந்தது!

#BREAKING: விமானப்படை பயிற்சி விமானம்: விபத்தில் விழுந்தது!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

மத்திய பிரதேசத்தில் விமானப்படையின் பயிற்சி விமானம் இன்று காலை விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் விமானப்படையின் பயிற்சி விமானம் மிராஜ் 2000 தொழில்நுட்பக் கோளாறால், இன்று காலை விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இதில் அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானிக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இந்திய விமானப்படை ட்விட்டரில் வெளியான தகவல்:

இன்று காலை பயிற்சி விமானத்தின் போது இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, விழுந்து நொறுங்கியது. அதன் விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தகவல் வெளியிடப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com