சீனாவில் அதிகரிக்கும் கொரோனா: வடமேற்கு மாகாணங்களில் ஊரடங்கு அமல்!

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா: வடமேற்கு மாகாணங்களில் ஊரடங்கு அமல்!
Updated on

சீனாவில் தொடர்ந்து 5-வது நாளாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு 5-வது நாளாக தொற்று அதிகமானோருக்கு பரவியதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தொற்று பரவலை தடுக்க 40 லட்சம் பேர் வசிக்கும் லான்சோ நகரில் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது.  மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

லான்சோ நகரில் இருந்து பிற மாகாணங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஜியான் மற்றும் லான்சோ இடையே 60 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிக அளவிலான பொதுமக்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், சுற்றலா தலங்களை உடனடியாக மூடவும் மாகாண அரசுகளுக்கு சீன மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

நிலக்கரி இறக்குமதிக்காக மங்கோலியாவிலிருந்து வந்தவர்கள் மூலம் சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

logo
Kalki Online
kalkionline.com