தீபாவளிக்கு ரேஷனில் 10 கிலோ அரிசி இலவசம்: புதுச்சேரி அரசு!

தீபாவளிக்கு ரேஷனில் 10 கிலோ அரிசி இலவசம்: புதுச்சேரி அரசு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு, தலா 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்க அம்மாநில முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல்துறை இயக்குனர் உதயகுமார் அனுப்பிய அறிக்கையில் தெரிவித்ததாவது:

புதுவையில் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தலா 10 கிலோ அரிசியும், 2 கிலோ சர்க்கரையும் வழங்கப்பட உள்ளன. இந்த பொருள்கள் அனைத்தும் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்குவதற்கு உரிய ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது. இதற்காக தற்போது செயல்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகள், அட்டைதாரர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை 2 நாள்களுக்குள் தயார் செய்து அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com