என்னிடம் உள்ள சொத்து சில ஆடுகள் மட்டும்தான்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை!

என்னிடம் உள்ள சொத்து சில ஆடுகள் மட்டும்தான்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை!

Published on

பாஜக மாநில தலைவர் அண்ணமலை தங்கள் நிறூவனம் மீது அவதூறு பரப்பியதாக 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு பிஜிஆர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சமீபத்தில் பாஜக மாநிலைத் தலைவர் அண்ணமலை தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக முறைகேடு புகார்கள் எழுப்பினார். தமிழக மின்வாரியமானது முறைகேடாக பிஜிஆர் நிறுவனத்திற்கு பல சலுகைகளை வழங்கி உள்ளதாக குற்றச்சாட்டினார். இதையடுத்து அண்ணாமலைக்கு பிஜிஆர் நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

அந்த வக்கீல் நோட்டீஸில் குறிப்பிட்டதாவது:

பிஜிஆர் நிறுவனத்தின்மீது அண்ணமலை அவதூறு பரப்பியதற்காக 10 நாட்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். மேலும் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம்.

இவ்வாறு அந்த வக்கீல் நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:

நான் ஒரு சாதாரண விவசாயி, என்னிடம் சொத்தாக இருப்பதெல்லாம் ஒரு சில ஆடுகள் மட்டுமே. மற்றபடி ஒருசில அமைச்சர்களைப் போல ஊழல் செய்து பணம் சம்பாதித்து கோடிகளில் சேர்க்கவில்லை. அதனால் கொடுப்பதற்கு எதுவும் இல்லை. நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது. அங்கே சந்திப்போம்.

இவ்வாறு அண்ணாலை தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பிக் கிளப்பியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com