தமிழக ஆளுநருடன் நாளை எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் சந்திப்பு!

தமிழக ஆளுநருடன் நாளை எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் சந்திப்பு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை காலை (அக்டோபர் 20) தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தின் புதிய ஆளுநராக கே.என்.ரவி பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக அவரை ஈபிஎஸ் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பு நாளை காலை 11 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

.தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, தமிழக முதல்வர் மு..ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கடந்த வாரங்களில் ஆளுநரை தனித்தனியே சந்தித்து குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com