
கல்கி குழுமம் வழங்கும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பங்கேற்க உங்களை அன்புடன் அழைக்கிறோம்!
எழுத்தாளர், பத்திரிக்கையாளர் அமரர் கல்கியின் நினைவாக, பல வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு, வாசகரிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, முத்திரைப்பதித்த சிறுகதைப் போட்டியை இன்று டிஜிட்டல் வடிவில் கல்கி ஆன்லைன் வாயிலாக நடத்துவதில் கல்கி குழுமம் பெருமிதம் கொள்கிறது.
படைப்பாளிகள், வாசக எழுத்தாளர்கள் அனைவரும் இப்போட்டியில் உற்சாகத்துடன் கலந்துகொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
விதிமுறைகள்:
(Google Form) வாயிலாக மட்டுமே கதைகளை அனுப்ப வேண்டும்.
ஒருவர் ஒரு கதை மட்டுமே அனுப்ப வேண்டும்.
800 ல் இருந்து 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். வார்த்தைகளின் எண்ணிக்கையை அவசியம் குறிப்பிட வேண்டும்.
சொந்தக் கற்பனைதான் என்பதற்கு உறுதிமொழி இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அது இல்லாத கதைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது.
அறிமுக எழுத்தாளர் எனில் இதற்கு முன் எந்தப் பத்திரிக்கையிலும் எழுதியதில்லையென்றும், போட்டி முடிவு வெளியாகும் வரை எழுதுவதில்லை என்றும் உறுதி மொழி தரவேண்டும்.
போட்டிக்கு அனுப்பும் கதையை, முடிவுகள் வெளியாகும்வரை வேறு இதழுக்கோ, இணையத்தளத்துக்கோ, வலைப்பதிவுகளுக்கோ, போட்டிக்கோ அனுப்பக்கூடாது.
பரிசுக்குரிய கதைகளை, நடுவர் குழு பரிசீலித்துத் தேர்ந்தெடுக்கும். சந்தேகம் எழும் விஷயங்களில் கல்கி ஆன்லைன் ஆசிரியரின் தீர்ப்பே இறுதி.
முடிவு வெளியாகும் வரை, எவ்விதக் கடிதப் போக்குவரத்தோ, தொலைபேசி, ஈ-மெயில் விசாரிப்புகளோ கூடாது.
பிரசுரத்திற்கு தேர்வாகும் கதைகளின் விவரமும், கதைகளும் Kalkionline.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
தேர்வாகாத கதைகள் பற்றி தெரிவிக்க இயலாது.
முதல் பரிசு பெறும் சிறுகதை அமரர் கல்கியின் பிறந்தநாளான 09-09-2025 அன்று கல்கி இணையதளத்தில் வெளியாகும்.
கடைசி தேதி: ஆகஸ்ட் 25
பரிசு விவரங்கள்:
முதல் பரிசு: ரூ.7500.00
இரண்டாம் பரிசு: ரூ.5000.00
மூன்றாம் பரிசு: ரூ.3000.00
ஆறுதல் பரிசுகள் (5): தலா ரூ.1000.00