பிப்ரவரி 13: தேசிய மகளிா் தினம்- கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த நாள்

கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த நாளான பிப்ரவரி 13 தேசிய மகளிா் தினமாக கொண்டாடப்படுகிறது.
kavikuyil sarojini naidu
kavikuyil sarojini naidu
Published on

சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் வரிசையில் சிறப்பானதொரு பெருமை வாய்ந்த, இந்தியாவின் புகழ்மிக்க பெண், சிறந்த சிந்தனையாளர், இலக்கியவாதி, சுதந்திர போராட்ட வீரர், காந்தி அடிகளின் கொள்கையில் ஈா்ப்பு கொண்டவர் கவிக்குயில் சரோஜினி நாயுடு (13.02.1879--02.03.1949).

இவரின் பிறந்த நாளான பிப்ரவரி 13, தேசிய மகளிா் தினமாக கொண்டாடப்படுகிறது. ஹைதராபாத்தில் வங்காள பிராமண குடும்பத்தில் பிறந்தவர். தகப்பனாா் அகோரநாத் சட்டோபாத்யாயா. அவர் ஒரு தத்துவவியலாளர், மற்றும் விஞ்ஞானியாவாா். தாய் வராக சுந்தரி அவரும் கவிஞரே.

சரோஜினி லண்டன் கேம்பிாிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தாா்.

1905ல் வங்காள பிாிவினையால் ஈர்க்கப்பட்டு கோபால கிருஷ்ண கோகலே, மற்றும் காந்திஅடிகள் ஆகியோருடன் சோ்ந்து உப்பு சத்தியா கிரகம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டாா்.

இந்திய தேசிய காங்கிரஸின் முதலாவது பெண் தலைவர். சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநராகவும் பதவி வகித்தவர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

ஆங்கிலத்தில் சிறந்த கவிதைகளைப் படைத்தவர்.

பெண்கள் விடுதலைக்காக பாடுபட்டவர். கவிக்குயில் சரோஜினியான இவரின் ஆற்றல், கவிநயம், பேச்சுத்திறன், சிறந்த ஆளுமை, இவைகளை பாராட்டி காந்தி அடிகளால் பாரதிய கோகிலா- The Nightingale of India - என அழைக்கப்பட்டாா்.

விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு தனது பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்தவர்.

பெண்களின் உரிமைக்காக அரும்பாடு பட்டவர். 1917ல் பெண்களின் வாக்குரிமைக்காக லண்டனில் வாதிட்டாா். அதே வருடத்தில் பெண்கள் இந்திய சங்கத்தையும் நிறுவினார்.

காந்தி அடிகளோடு பல போராட்டங்களில் கலந்து கொண்டதால் 21 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர் .

இங்கிலாந்தில் தங்கியபோது டாக்டர் முத்யாலா கோவிந்தராஜுலு நாயுடு என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஜெயசூர்யா, பத்மஜா, ரந்தீர், லீலாமணி ஆகிய வாாிசுகள் உண்டு. பன்முகத் தலைவரான அவர் நெசவாளர் வாழ்க்கைமுறை, மீனவர்கள் வாழ்க்கை வரலாறு, வளையல் விற்பனையாளர்கள் வாழ்க்கை வழிவகைகள் போன்ற பல்வேறு கட்டுரைகளை எழுதி உள்ளாா். இப்படி இவரது புலமைகளை சொல்லிமாளாது.

இதையும் படியுங்கள்:
இசையரசி எம். எஸ். அவர்களுக்கு கவியரசி சரோஜினி நாயுடு வாழ்த்து... எங்கே? எப்போ? என்ன சொன்னார் தெரியுமா?
kavikuyil sarojini naidu

சுதந்திர போராட்ட வீரர், பெண் உாிமைக்கு பாடுபட்ட சரோஜினி அகவை எழுபதில் 02.03.1949ல் லக்னோவில் காலமானாா்.

அவரது புகழ் வரலாறு உள்ள வரை நிலைத்திருக்கும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com