கவிதை: இந்தியாவின் சுதந்திரம்!

national flag
national flagImage credit - pixabay
Published on

யற்கைச் சூழலில்

இந்தியா வனப்புடன்.

மன்னராட்சியில் மக்கள்

மகிழ்வான வாழ்க்கை.

அன்போடு அருளாய்

அடக்கமோடு வாழ்தல்.

ஆமைவழிப் பயணம்

ஆக்கத்தில் சிறப்பாய்.

வணிகராய் அயலவர்

வேட்கையோடு உள்புகல்.

பிரிவினை போதித்தே

பிரித்தே ஆளுகை.

உட்பூசல் செய்து

உடைத்தனர் மக்களை.

மக்களிடையே விழிப்புணர்ச்சி

மாசற்றோர் புரட்சி.

அன்னியர் ஆதிக்கம்

அடக்குமுறை அதிகாரம்.

தாய்நாட்டில் அடிமைவாழ்வு

தாங்கொணாத்

துயருறல்.

சுதந்திரம் வேண்டியே

தலைவர்கள்  போராட்டம்.

காந்தி தொடங்கினார்

அறவழிப்போராட்டம்.

ஆயுதமின்றி நாளும்

அகிம்சை போராட்டம்.

தன்னலமற்ற நம்நாட்டின்

தியாகிகள் உயிர்நீத்தல்.

இறுதியில் அடைந்தது

இந்தியா விடுதலை.

பெற்ற சுதந்திரத்தைப்

பேணியே காப்போம்.

காந்தியின் பாதை!

காந்தி...
காந்தி...Image credit - pixabay

காந்தியின் தொலைநோக்கு

காட்டுவது காந்தியம்.

தனிப்பட்ட மனிதனின்

தன்னிச்சை வாழ்வு

வாய்மை ஒழுக்கத்தில்

வன்முறை அற்றது.

அன்றாட வாழ்வின்

அன்பான ஒழுகலாறு.

அறநெறி ஒழுக்கம்

அரணாய்க் காக்கும்.

மக்களிடம் வேறுபாடு

மனங்களைச் சார்ந்தது.

அதனை அகற்றிட

அடக்குமுறை கூடாது.

மதுவிலக்கு சிற்றின்ப

நாட்டத்தைக் குறைக்கும்.

உண்ணா நோன்பால்

உளமே கட்டுப்படும்.

வலிகளைத் தாங்கும்

வலிமையை நல்கும்.

மனதை அமைதியாக்க

வழிபாடு உதவுமே.

எளிய வாழ்க்கையே

ஏற்றத்தைத் தருமே.

தன்னிறைவு பெற்றிட

தளராது உழைத்திடு.

எம்மதமும் சம்மதமே

என்றே முழங்கிடுக.

ஆயுதம் ஏந்தாது

அறவழி ஒழுகுக.

அன்பின் பாதையில்

அடக்கமாய் நடந்திடுக.

காந்திய வழியே

களிப்பூட்டும் பாதையாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com