கோடநாடு எஸ்டேட் அருகே சாலையில் உலாவிய புலிகள்: பொதுமக்கள் அச்சம்!

கோடநாடு எஸ்டேட் அருகே சாலையில் உலாவிய புலிகள்: பொதுமக்கள் அச்சம்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட் பகுதியில் இரண்டு புலிகள் இரவில் உலா வந்தது அறிந்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் சமீபகாலமாக கரடி, சிறுத்தை, யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் நேற்றிரவு கோடநாடு எஸ்டேட் அருகே உள்ள காந்தி நகர் பகுதியில் இரண்டு புலிகள் உலா வந்ததை அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் கைப்பேசி மூலம் பதிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அநத 2 புலிகளை கூண்டு வைத்து பிடிக்கவோ அல்லது மயக்க ஊசி செலுத்தி பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் மீண்டும் கொண்டுவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com