குடியரசு தின விழா; தமிழக காவல்துறை அதிகாரிகள் 2 பேருக்கு ஜனாதிபதி பதக்கம்!

குடியரசு தின விழா; தமிழக காவல்துறை அதிகாரிகள் 2 பேருக்கு ஜனாதிபதி பதக்கம்!
Published on

நம் நாட்டின் 73-வது குடியரசு தினம் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் குடியரசு தினத்தையொட்டி தமிழகம் உட்பட நாடு முழுவதும் 939 காவல்துறையினருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக காவல் அதிகாரி .டி.ஜி.பி. வெங்கடராமன் மற்றும் சி.பி.சி..டி. காவல் ஆய்வாளர் சிவனருள் ஆகியோருக்கு ஜனாதிபதி பதக்கத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் 18 காவல்துறை அதிகாரிகளுக்கு மெச்சத்தகுந்த பணிக்கான விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் விவரம் பின்வருமாறு;

* திருச்சி மத்திய மண்டலம் .ஜி. வி.பாலகிருஷ்ணன், சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் பிரதீப் குமார், கோவை மேற்கு மண்டல .ஜி. ஆர்.சுதாகர், சென்னை ..ஜி.சவரணன், கியூ பிரிவு எஸ்.பி. கண்ணம்மாள், சென்னை போக்குவரத்து துணை ஆணையர் சுரேந்திரநாத், கியூ பிரிவு சி..டி. ஆய்வாளர் கே.அண்ணாத்துரை, மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு போலீஸ் கமாண்டர் கார்த்திகேயன், சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு சி..டி. கூடுதல் எஸ்.பி. தாமஸ் பிரபாகரன், வங்கி மோசடி புலனாய்வு பிரிவு உதவி ஆணையர் பிரபாகரன், உளவுப்பிரிவு உதவி ஆணையர் முருகவேள், கோவை குற்றப்பிரிவு டி.எஸ்.பி. முரளிதரன், கடலூர் லஞ்சஒழிப்பு காவல் ஆய்வாளர் சண்முகம், கோவை போக்குவரத்து திட்டமிடல் கூடுதல் துணை ஆணையர் இளங்கோவன், ஆகியோருக்கு பெச்சத் தகுந்த பணிக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com