குஷிநகா் சா்வதேச விமான நிலையம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைப்பு!

குஷிநகா் சா்வதேச விமான நிலையம்: பிரதமர் மோடி இன்று திறந்து வைப்பு!
Published on

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகா் சா்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்இந்த விழாவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குஷிநகா் சா்வதேச விமான நிலையம் இன்று தொடங்கப்பட்டதையடுத்து முதல் விமான சேவையாக இலங்கை, கொழும்பு விமான நிலையத்திலிருந்து சா்வதேச பயணிகள் விமானம் வந்து தரையிறங்கியது. இந்த விமானத்தில் இலங்கை இளைஞா்கள் மற்றும் அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சா் தலைமையில் 5 அமைச்சா்கள், பௌத்த துறவிகள் மற்றும் முக்கிய பிரமுகா்கள் அகியோர் வந்தனர். அவர்களை நம் நாட்டு மத்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா வரவேற்றார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

குஷிநகா் சா்வதேச விமான நிலையம் ரூ.260 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. புத்தபிரான் மகாபரிநிர்வாணம் அடைந்த இடத்தைப் தரிசிக்க விரும்பும் சா்வதேச யாத்ரிகா்களுக்கு வசதியாக இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. மேலும், பௌத்த மதத்துடன் தொடா்புடைய பல்வேறு புனிதத் தலங்களை இணைக்கும் வகையிலும் செயல்படும். இந்த விமான நிலையத் திறப்பு விழாவைத் தொடர்ந்து பிரதமர் மோடி, புத்தர் ஞானமெய்திய கோயிலுக்குச் சென்று அங்கு சாய்ந்த புத்தர் சிலையை வழிபட்டு, போதி மரக்கன்று ஒன்றையும் நடுகிறார். மேலும் ஷிநகரில் ரூ.250 கோடி செலவில் அமைக்கப்படவுள்ள ராஜ்கியா மருத்துவக்கல்லூரிக்கு பிரதமா் அடிக்கல் நாட்ட உள்ளார்.மேலும் ரூ.180 கோடிக்கு மேல் மதிப்புள்ள 12 வளா்ச்சித் திட்டங்களையும் பிரதமா் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com