மாடியிலிருந்து தாக்கிய துப்பாக்கி தோட்டா! அமெரிக்காவில் கேரள மாணவி பலி!

மாடியிலிருந்து தாக்கிய துப்பாக்கி தோட்டா! அமெரிக்காவில் கேரள மாணவி பலி!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

அமெரிக்காவில் கேரளாவை சேர்ந்த 19 வயது மாணவி த்ன் வீட்டு ,மாடியிலிருந்து பறந்து வந்த துப்பாக்கி தோட்டாக்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்லது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர்கள் மேத்யூ மற்றும் பின்சி தம்பதிக்கு இரண்டு மகன்களும் மரியம் சூசன் என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 4 மாதஙக்ளுக்கு முன்புதான் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். மரியம் சூசன் உயர் பள்ளிகல்வியை இந்தியாவில் முடித்து, இப்போது அமெரிக்காவில் படித்துவந்துள்ளார். இந்தநிலையில் மரியம் சூசன் தனது வீட்டில் இருந்தபோது வீட்டின் மேல் மாடியில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் அவர் மீது பாய்ந்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே மரியம் உயிரிழந்தார். அவர் வீட்டின் மேல்மாடியில் வசிப்பவர் இத்தாக்குதல் நடத்தியதாக தெரிய வந்துள்லது. போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com