மத்திய பட்ஜெட்: பல்வேறு துறையுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் ஆலோசனை!

மத்திய பட்ஜெட்: பல்வேறு துறையுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் ஆலோசனை!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

நாட்டில் அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட் உள்ளநிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து பல்வேறு துறைகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசுதரப்பில் தெரிவிக்கப் பட்டதாவது:

நாட்டின் மத்திய பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது, இந்நிலையில் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் தொடர்பாக தொழிற்துறையினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முதல் ஆலோசனை நடத்தத் துவங்கியுள்ளார். குறிப்பாக, விவசாயம் மற்றும் வேளாண் பொருட்கள் பதப்படுத்துதல் துறையை சேர்ந்தவர்களின் கோரிக்கைகளை காணொலிக் காட்சி மூலம் நிதியமைச்சர் கேட்டறிய உள்ளார்.

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com