
இன்று (மே 1) 80 நாடுகளில் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
முதல் தொழிளார் புரட்சி ரஷ்யாவிலோ சீனாவிலோ நடைபெற வில்லை. அமெரிக்காவில் தான் நடந்தது.
1886 ம் ஆண்டு சிகாகோவில்..
8 மணி நேரம் உழைப்பு
8 மணி நேரம் ஒய்வு
8 மணி நேரம் உறக்கம் என்று முழங்கி தமது கடைசி ஆயுதமான வேலை நிறுத்தம் மேற்கொண்டார்கள்.
முதலாளி வர்க்கமும், அரசும் தொழிலாளார் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டன.
துப்பாக்கி சூடும் நடந்தது. தொழிலாளரின் ரத்தம் வெள்ளம் போல் ஆறாக ஓடியது. அன்று முதல் கம்யூனிஸ்ட் கொடி சிவப்பாக மாறியது.
மார்க்ஸ்… “உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்! “ என்று முழங்கினார்.
மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டார்கள். உலகு தழுவிய ஆதரவு கிடைத்தது.
மார்க்ஸ் ஐரோப்பாவில் புரட்சி வெடிக்கும் என நினைத்தார். மாறாக ரஷ்யாவிலும், சீனாவிலும் நடந்தது. உலகில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி வந்தது.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் அமைப்பு 1925ல் அமைக்கப்பட்டது. தமிழ் நாட்டில் தோழர் சிங்காரவேலர்தான் முதல் கம்யூனிஸ்ட்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பத்தில் இருந்தே ஒரு குழப்பத்தில் இருந்தது. ஆம். மார்க்சியம் என்பது தத்துவம், சித்தாந்தம் சம்பத்தபட்டவை. முதலில் இருந்தே இந்திய கம்யூனிஸ்டுகள் திண்டாடினார்கள். கம்யூனிஸ்டு கட்சி சுதந்திர போரட்டம்போது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவு தந்தது. ஸ்டாலினை தலைக்கு மேல் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.
ஸ்டாலின் பாசிச, நாசிசத்தை எதிர்த்து போராடி வெற்றி பெற்றார் என்பது உண்மையே..! ஆனால் உள்நாட்டில் சர்வாதிகாரியாக திகழ்ந்தார்.
அவர் இறந்ததும் அவரது மகள் அமெரிக்கா சென்றார். போகும்போது ஸ்டாலினை ஒரு டெவில் என்று பத்திரிகையில் பேட்டி அளித்தார்.
இன்று உலகம் மாறினாலும் தொழிளார் நிலை மாறவில்லை. இது கொடுமையிலும் கொடுமை. அதிலும் அமைப்பு சாரா தொழிளார் நிலை மிகவும் மோசமான உள்ளது. பெரும்பாலான அமைப்பு சாரா தொழிலாளர்கள் வட நாட்டில் இருந்து வந்தவர்கள். அவர்கள் நிலைமை படுமோசம்.
இன்று உலகமயமாக்கம், நவீனமயமாக்கம் என்று பொருளாதாரம் இருந்தாலும், தொழிலாளி-விவசாயி நிலை மாறாமல் இருந்து வருகிறது.
விவசாயி தற்கொலை வாடிக்கை ஆகி விட்டது.
இந்த மே 1 அன்று சூளுரைப்போம்.
8 மணி நேரம் உழைப்பு
8 மணி நேரம் ஓய்வு
8 மணி நேரம் உறக்கம்
பின் முக்கியமாக
வாரம் 2 நாள் விடுமுறை..
இதுவே மே தின முழக்கமாக இருக்க வேண்டும்.