'GPS -ன் தாய்' என்று அழைக்கப்படும் 'அட்லஸ்' உலகிற்கு அறிமுகமானது எப்படி தெரியுமா?

மே 20 - உலக அட்லஸ் தினம்.
World Atlas day
Atlas
Published on

பூமியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள நிலம், நீர் உள்ளிட்டவைகளை வரைபட அமைப்பில் காட்டும் புத்தகம் தான் 'அட்லஸ்' (MAPS) என்கிறோம். இப்பெயர் எப்படி வந்தது? அட்லஸ் என்ற கிரேக்கக் கடவுள், தன் தோள்களின் மேல் உலகைத் தாங்கிக்கொண்டு இருப்பதாக கிரேக்கர்கள் நம்பினர். இம்மாதிரிதான் அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரும் வந்தது. உலகைத் தாங்கும் 2 தூண்கள் அட்லாண்டிக் கடலில் உள்ளது என்றும் அதை அட்லஸ் என்ற கிரேக்கக் கடவுள் தாங்குகிறார் என்றும் நம்பி வந்தனர். எனவே, உலகின் நிலப்படத்தை உள்ளடக்கிய நூல், கிரேக்கக் கடவுள் அட்லஸின் பெயரால் வழங்கப்படுகிறது.

கி.பி. 1453-ம் ஆண்டு ஓட்டோமான் துருக்கியர்கள், கான்ஸ்டாண்டி நோபிளைக் கைப்பற்றினர். இதனால் ஆசிய நாடுகளுடனான ஐரோப்பிய வணிகம் துருக்கியர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது. ஆசிய நாடுகளுடனான, ஐரோப்பிய வணிக வழித்தடமான தரைவழித்தடம் தடைப்பட்டது. அதனால் கடல்மார்க்கமாகத்தான் ஆசிய நாடுகளைச் சென்றடைய வேண்டும் என்ற நிலை உருவானது.

அந்தக் காலகட்டத்தில் உலகின் முதல் மேப் எனும் அட்லஸ் 1570 ம் ஆண்டு மே மாதம் 20 ம் தேதி உலகிற்கு அறிமுகமானது. இதற்கு முந்தைய உலக வரை படங்கள் தெளிவில்லாமல் இருந்த நிலையில் இது ஓரளவு தெளிவுடன் 33 ஓவியங்களால் வரையப்பட்டது. ஆனால் அதன் பெயர் அப்போது அதற்கு அட்லஸ் கிடையாது. அதன் பெயர் "தியேட்டர் ஆஃப் த ஆர்ப் ஆஃப் த வேர்ல்டு (Theatre of the orb of the world ") என்பது தான்.

நெதர்லாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற புவியியல் அளவீட்டு நிபுணரான ஜெரார்டஸ் மெர்கட்டர்க்கு (Geradus Mercator ) உலக நாடுகள் அளவுகள் குறித்த வரைபடம் வரையும் பொறுப்பு வழங்கப்பட்டது. அதனால் உலக உருண்டையில் குறுக்கும்நெடுக்குமாகப் பல கோடுகள் வரையப்பட்டன.

உருண்டையின் முப்பரிமாணத்தில் உள்ள ஒரு நேர்க்கோட்டைத் தட்டையாக, இருபரிமாணமாக மாற்றும்போது வளைந்த கோடாக மாறியது. இதனால் நிலநடுக்கோட்டுக்கு அருகில் சிறிய அளவிலான கட்டங்களாகவும், நிலநடுக்கோட்டுக்குத் தொலைவில் செல்லச்செல்ல பெரிய கட்டங்களாகவும் மாறின. இதை மையமாகவைத்து 1569-ம் ஆண்டு மெர்கட்டர் உலக வரைபடத்தை வரைந்தார். 'அட்லஸ்' என்ற பெயரில் உலக வரை படத்தை வெளியிட்டவர் இவர் தான்.

மெர்கட்டர்க்கு முன்னும் பின்னும் பலரால் உலக வரைபடங்கள் வரையப்பட்டிருந்தாலும், நாடுகளின் திசையை அறிய மெர்கட்டர் வரைபடமே சிறந்தது என அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்த வரை படம்தான் 'மெர்கட்டர் வரைபடம்' (Mercator Map) என தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆபிரகாம் ஆர்டிலியஸ் (Abraham ortelius) ஆண்ட்வெர்ப்பில் 1598 ல் தெளிவான அட்லஸை புத்தக வடிவில் வெளியிட்டார். 7300 பிரதிகள் விற்பனையானது. லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மன், டச்சு, ஸ்பானிஷ், ஆங்கிலம் மற்றும் இத்தாலிய மொழிகளில் வெளியானது. இதில் 70 மேப்கள் 53 ஷிட்கள் இருந்தன.

இதையும் படியுங்கள்:
இறைவன் தரிசனத்தை தடுக்கும் 7 திரைகள்!
World Atlas day

உலகின் முதல் உலக வரை படத்தை வரைந்தவர் வானவியல் அறிஞர் டால்மி . லண்டனில் இருந்த இந்த மேப். 1477 ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. அதன் பின் இது வாஷிங்டன் பிரபுவின் நூலகத்தில் இருந்தது. பின்னர் இங்கிலாந்து வந்தது. அது 2006 ம் ஆண்டு ஏலம் விடப்பட்டது. எவ்வளவிற்கு தெரியுமா?..19 கோடிக்கு.

உலகின் பழமையான உலக வரை படம் ஒன்று பபேலோ பல்கலைக்கழக கண்காட்சியின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது 1815 ம் ஆண்டு இறையியல் அடிப்படையில் வரையப்பட்ட 43 வரைபடங்களில் ஒன்று. உலகெங்கும் விநியோகிக்கப்பட்ட படங்களில் 11 வரை படங்கள் மட்டுமே உலகில் தற்போது உள்ளன. அதில் ஒன்று அமெரிக்காவில் உள்ள காங்கிரஸ் நூலகத்தில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு சோலோ ட்ரிப் போக ஆசையா? தைரியமா கிளம்புங்க... இந்த டிப்ஸ் உங்களுக்காக..!
World Atlas day

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com