மிஸ் . யுனிவர்ஸ் பட்டம் வென்றார் இந்திய அழகி ஹர்னாஸ் கவுர்!

மிஸ் . யுனிவர்ஸ் பட்டம் வென்றார் இந்திய அழகி ஹர்னாஸ் கவுர்!

Published on

ஒவ்வொரு வருடமும் சர்வதேச அளவில்  உலக அழகிப்போட்டி பிரஞ்ச அழகி போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென்னை தொடர்ந்து இந்தியா இந்த பட்டங்களை சில முறை வென்றாலும், கடந்த பல வருடங்களாக இந்தியாவை சேர்ந்த அழகிகள் இந்த பட்டங்களை பெறவில்லை.

இந்நிலையில், இந்திய பிரபஞ்ச அழகி என அழைக்கப்படும் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து வென்றுள்ளார். இஸ்ரேலின் சுற்றுலாத்தலமான எய்லட்டில் நடைபெற்ற அழகிப்போட்டியில் இவர் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சுமார் 80 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் ஹர்னாஸ் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு வயது 21. இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இதையடுத்து, பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com